சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது, நாடகம் என்பது தமிழக மீனவர்கள் மீது இன்று நடந்த துப்பாக்கி சூட்டின் மூலம் நிரூபணமாகியுள்ளதாக தெரிவித்தார்.

மீனவர் பிரச்சனை குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினார். 

மேலும் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி கிடைக்காதது வேதனை அளிகிறது என்று தெரிவித்த அவர்,

வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டை நடத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.