விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என உண்ணாவிரத கூட்டத்தில் திருநாவுக்கரசர் வலியுறுத்தி பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர், மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

தென்னூர் உழவர் சந்தையில் நடைபெறும் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரத கூட்டத்தில், திருநாவுக்கரசார் பேசியதாவது.

மத்திய அரசிடம், விவசாயம் பாதித்த பகுதிகளை வறட்சி மாவட்டமாக அறிவிக்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி பிரச்சனையில் செயல்படவேண்டிய மத்திய அரசு செயல்படாமல் உள்ளது வன்மையாக கண்டித்தக்கது என்றார்.