Asianet News TamilAsianet News Tamil

தென்காசி வழக்கில் அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்!

தென்காசி மாவட்டத்தில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Conditional bail for amar prasad reddy in tenkasi police case smp
Author
First Published Nov 3, 2023, 3:44 PM IST | Last Updated Nov 3, 2023, 3:44 PM IST

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அதனை அகற்ற சென்ற காவல் துறையினருக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜேசிபி வாகனமும் சேதப்படுத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவருமான உள்ள அமர் பிரசாத் ரெட்டி  உள்ளிட்ட 6 பேரை கானாத்தூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீஸார் கைது செய்தனர்.

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய புகாரிலும், வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின்போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கிலும் அவரை போலீசார் கைது செய்தனர்.

இதில், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. செஸ் ஒலிம்பியாட் விளம்பரப்படம் தொடர்பான வழக்கில் தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமர் பிரசாத் ரெட்டிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

குழந்தை ராமர் சிலையை சுமந்து செல்லும் பிரதமர் மோடி: கருவறையில் வைக்கப்படும் சிலை எது?

இதனிடையே, தென்காசி மாவட்டத்தில் நடந்த என் மண், என் மக்கள் பாத யாத்திரை நிகழ்ச்சியின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமர் பிரசாத் ரெட்டி மீது ஆழ்வார்குறிச்சி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கிலும் காவல் துறையினர் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கில் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அமர் பிரசாத் ரெட்டியை காவல் துறையினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியை ஆஜர்படுத்துவதற்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து தென்காசிக்கு அரசு பேருந்தில் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios