விழுப்புரம்

காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட எந்த பிரச்சனையையும் கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய அறப்போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசை கண்டித்து அறப்போராட்டம் நடத்தப்படும் என்று, நமது மக்கள் கட்சி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் கே.வி.ஆர். விருந்தினர் மாளிகையில், நமது மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நிறுவன தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். தேசிய பொது செயலாளர் முரசுவீரையா முன்னிலை வகித்தார்.

துணை தலைவர்கள் கோவிந்தன், கோவிந்தராஜ், வேம்புலி, பொருளாளர் பார்த்திபன், பொது செயலாளர் சரவணதேவா ஆகியோர் பேசினர்.

இந்தக் கூட்டத்தில் காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட எந்த பிரச்னையையும் கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய அறப்போராட்டம் நடத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில துணை செயலாளர் ராமானுஜம் நன்றி கூறினார்.