communist party of india condemned and Protests against petrol and diesel price hike

புதுக்கோட்டை

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசு மக்கள் விரோத செயல்பாடுகளை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், திலகர் திடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநில குழு உறுப்பினர் தர்மராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செங்கோடன் கோரிக்கையை விளக்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில, "எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதனை மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. 

மத்திய அரசு மக்கள் விரோத செயல்பாடுகளை கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தின. 

இந்த ஆர்ப்பாட்த்தில் பங்கேற்ற ஏராளமான நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.