மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் மருத்துவர் மன்மோன்சிங் வரவேற்றார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளை அறங்காவலர் கோ.ப.அன்பழகன், துணைத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினர்.

இதில், முதலாமாண்டு படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி கண்காணிப்பாளர் மருத்துவர் சாந்தா பார்த்தீபன் நன்றி கூறினார்.