collage student deat in dindukkal
திண்டுக்கல்லில் குளத்தில் மூழ்கிய நண்பனை காப்பாற்றச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் சோலைஹால் தெருவைச் சேர்ந்த ரித்திக் சகாயம், தனது நண்பர்களுடன் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் கால் கழுவுவதற்காக சென்றுள்ளனர். அப்போது ரித்திக்கின் நண்பரான வின்னரசு கால் தவறி குளத்தில் விழுந்துள்ளார்.
நண்பன் தண்ணீரில் விழுந்து தத்தளித்து.... உயிருக்குப் போராடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரித்திக். தன்னுடைய நண்பனை காப்பாற்றும் நோக்கில், குளத்தில் குதித்து சேற்றில் மாட்டிய வின்னரசுவை மேலே தள்ளி விட்டார். ஆனால் ரித்திக் சகாயத்தின் கால் சேற்றில் மாட்டிக் கொண்டதால் இவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
பின் மேலே இருந்த மற்றவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அருகிலிருந்தோர் ரித்திக் சகாயத்தின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த போது இவர் மரணமடைந்தது தெரியவந்தது.
