Egmore ceytatat cancel the order of the Court ordered the investigation to counter-Shashikala News.

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலவாணி வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கடந்த 1996-97ம் ஆண்டு சசிகலா, டிடிவி தினகரன், பாஸ்கரன் ஆகியோர் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் பணப்பரிவர்த்தனை செய்தனர். 

எந்த ஆவணமும் இல்லாமல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் அமலாக்க பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.

டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்திற்கு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள வங்கிகள் மூலம் வெளிநாட்டு கரன்சியை மாற்றியது என 2 வழக்குகள் தினகரன் மீது போடப்பட்டது. d

இவ்வழக்கில் இருந்து சசிகலா தினகரன் ஆகியோரை விடுவித்த எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் , எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தததோடு, விசாரணையை எதிர்கொள்ளும்படி சசிகலா தினகரனுக்கு உத்தரவிட்டது. 

இவ்வழக்கு விசாரணை கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணி காரணமாக தனக்கு ஒரு நாள் கால அவசாகம் வேண்டும் என்று தினகரன் சார்பில் வாதாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு ஒரு நாள் அவகாசம் அளித்தது. 

இந்நிலையில் இவ்வழக்கு மீதான விசாரணை எழும்பூர் பெருநகர நீதிமன்ற கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது தினகரன் மற்றும் அரசுத் தரப்பு விசாரணைக்கு ஆஜராகினர்.