திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் கட்சி அலுவலகத்தில் உள்ள ஒரே ஒரு அறையில் மனைவியுடன் குடியேறினார்,

திரிபுராவில் முதலமைச்சராக 20 ஆண்டுகள் ஆட்சி செய்த மாணிக் சர்க்கார், தற்போது கட்சி அலுவலகத்தில் ஒரே ஒரு அறை கொண்ட பகுதியில் மனைவியுடன் குடியேறியுள்ளார்.

பா.ஜ.க. வெற்றி பெற்றதும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய மாணிக் சர்க்கார் மறுநாளே அரசு வீட்டில் இருந்து தங்களது உடைகள் மற்றும் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யாவுடன் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று குடியேறினார்.

திரிபுராவில் முதலமைச்சராக 20 ஆண்டுகள் ஆட்சி செய்த மாணிக் சர்க்கார்,தனக்கென பெரிய அளவில் எந்த சொத்தும் சேர்த்து வைத்துக்கொள்ள வில்லை.சாதாரண வாழ்கை  வாழ்ந்த முதல்வர் இவர்.