தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, ஆளுநர் ரவி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தலைவர்கள் ஸ்டாலின் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர வாழ்த்தினர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, நேற்று முதலே அவருக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு ஸ்டாலினை வாழ்த்தி பேசினர். இந்நிலையில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ரவி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தாங்கள் இன்ற தங்களுடைய 72வது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மேலும் எல்லா வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழக மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
அன்புமணி வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 72-ஆம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.
ராமதாஸ் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 72-ஆம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.
அண்ணாமலை வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழிசை வாழ்த்து
மும்மொழியில் வாழ்த்துகிறேன்...
“மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!”
“Wishing the Honourable Chief Minister Thiru M.K. Stalin a very happy birthday!”
“గౌరవనీయ ముఖ్యమంత్రి శ్రీ ము.క. స్టాలిన్ గారికి హృదయపూర్వక జన్మదిన శుభాకాంక్షలు!” என்று பதிவிட்டுள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து
தென்னகத்தின் உரிமைக்குரலாய் - தமிழ்நாட்டின் சுயமரியாதைச் சுடராய் - தமிழ் நிலத்தின் தகத்தகாய சூரியனாய் - தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவராய் விளங்கி வரும் திராவிட மாடல் முதல்வர் - கழகத் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளில் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கச் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.
விஜய் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் வாழ்த்து
இன்று பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன். தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு என பதிவிட்டுள்ளார்.
