மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் 12 நாள்களுக்கு நீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் கால்நடை தேவைகளுக்காக நீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று காலை விநாடிக்கு 15  ஆயிரம்  கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

குடகு உள்ளிட்ட காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

 இந்த அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதன் விளைவாக, இன்றுகாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம்  கன அடி வீதம் தண்ணீர் வருகிறது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கரை கால்வாய்களில் 12 நாள்களுக்கு நீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் கால்நடை தேவைகளுக்காக நீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.