chennai sunk in rain water... kamalhassan in twitter
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மழை நீா் செல்ல போதிய வழித்தடங்கள் இன்றி குடியிருப்புகள் அனைத்தும் மழைநீரில் மிதக்கும் சூழல் உருவாகியுள்ளது என்றும் , வருமுன் காப்போம், நித்திரை கலைப்போம் என்று நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக நடிகா் கமல்ஹாசன் தனடு டுவிட்டா் பக்கத்தில், “சென்னையின் தென்மேற்கு வடமேற்குப் பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றன.
சேலையூா் ஏரி, கூடுவாஞ்சேரி, நந்திவரம், முடிச்சூா் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது என குறிப்பிட்டுள்ளார்.
நீா்நிலை ஆா்வலா்களுக்கோ மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு தெரியாது. நீா் வரத்து பாதைகளும், நீா் வெளியேறும் பாதைகளும் தெரியாது. தெரியாது , தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாய் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மை என தெரிவித்துள்ளார்.

இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும் என தெரிவித்துள்ள கமல் தனக்கு வரும் செய்திகள் கலவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏரிக்கு நீா் வரும் பாதையை மறித்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் கடந்த 2015ல் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இன்று வரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், குரலெழுப்பவும் ஊடகங்கள் உதவவேண்டும். வரும் முன் காப்போம், நித்திரை கலைப்போம் என்று நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
