Asianet News TamilAsianet News Tamil

சென்னை செங்கல்பட்டு இடையே ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிப்பு

chennai sub urban trains stopped due to signal problems
chennai sub urban trains stopped due to signal problems
Author
First Published Oct 30, 2017, 8:16 PM IST


சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலையில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், தாம்பரம் செங்கல்பட்டு இடையே ரயில் போக்குவரத்தில் சிக்னல் கோளாறினால் ரயில்கள் ஆங்காங்கே நின்றன. இதனால், ரயில் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது. வெளியூர் செல்லும் ரயில்கள் இதனால் தாமதமாகச் சென்றன.

சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நடு சாலையில் ஊர்ந்து சென்றன. மாலை அலுவலகம் முடிந்து வீடுகளுக்குத் திரும்புவோர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலைப் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானதால் ஒரே நேரத்தில் ரயில் நிலையங்களில் குவிந்தவர்கள் ரயில்களில் வீடுகளுக்குத் திரும்பினர். இதனால் ரயில்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகரித்திருந்தது. இந்நிலையில், சிக்னல் கோளாறு ஏற்பட்டதால், புறநகர் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios