சென்னையில் பெய்து வரும் தொடர் மழையினால் அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மேட்லி, அரங்கநாதன் உள்ளிட்ட நான்கு சுரங்கப்பாதைகள் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையினால் அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மேட்லி, அரங்கநாதன் உள்ளிட்ட நான்கு சுரங்கப்பாதைகள் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளன.
வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் வலுவாக காற்றின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகல் முதல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த சில வாரங்களாக சென்னையில் பனியும் வறண்ட வானிலையும் நிலவி வந்த நிலையில் இன்று திடீரென கனமழை பெய்துள்ளது. இதனிடையே கடந்த 7 மணி நேரத்திற்கு மேலாக விடாமல் பெய்து வரும் மழையினால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியுள்ளாகியுள்ளனர்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், அமைந்தகரை, கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, சேத்துப்பட்டு, ஈக்காட்டுத்தாங்கல், மயிலாப்பூர், மீனம்பாக்கம், நந்தனம், அசோக் நகர், பாரிமுனை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் பெய்து வரும் தொடர் மழையினால் அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மேட்லி, அரங்கநாதன், கெங்குரெட்டி , ரிசர்வ் வங்கி உள்ளிட்ட சுரங்கபாதைகள் மழை நீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மேலும் சென்னையில் தொடர் மழையினால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கே.கே.நகர் - ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர்- டாக்டர் சிவகாமி சாலை, ஈவிஆர் சாலை, காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை, செம்பியம்- ஜவஹர் நகர் 20 அடி சாலை, குளத்தூர் விநாயகபுரம் - ரெட் ஹில்ஸ் சாலை, 100 அடி பெரியார் சாலை, நூங்கம்பாக்கம் லேக் வியூ ரோடு உள்ளிட்ட சாலையில் கடும் போக்குவரத்து ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக செல்கின்றன."
இந்நிலையில் நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று பெய்த மழையில், எம்.ஆர்.சி நகரில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 2 மணிநேரத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இங்கு குறைந்த நேரத்தில் அதிகப்படியான மழை பதிவாகியிருக்கிறது. மீனம்பாக்கத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
