Asianet News TamilAsianet News Tamil

சென்னை மக்களே குட் நியூஸ் !! இனி புதிய வழித்தடத்தில் 'மெட்ரோ இரயில்..' இன்று முதல் தொடக்கம் !!

இன்று முதல் சென்னை திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

chennai Metro Rail Corporation has announced that the Chennai Tiruvottiyur Theradi and Wimco Nagar workshop metro stations starts today
Author
Chennai, First Published Mar 13, 2022, 7:32 AM IST

இன்று முதல் புதிய வழித்தடம் :

சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தில், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரை, 2021 பிப்ரவரியில் இருந்து, மெட்ரோ ரயில் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, இப்பாதையில் விம்கோநகர் - விமான நிலையம் இடையே ரயில் போக்குவரத்து நடக்கிறது.வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ பாதையில், திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் பணிமனை ரயில் நிலையங்கள் கட்டுமான பணி முடியாததால் திறக்கப்படவில்லை.

chennai Metro Rail Corporation has announced that the Chennai Tiruvottiyur Theradi and Wimco Nagar workshop metro stations starts today

கடந்த பிப்ரவரி மாதம் இந்நிலையங்கள் கட்டுமான பணி முடிந்து, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வு செய்து, பயணியர் ரயில் நின்று செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, இந்நிலையங்கள் இன்று திறக்கப்படுகின்றன. இன்று காலை 7:00 மணியில் இருந்து, ரயில்கள் நின்று செல்லும். விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையத்தில் இம்மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்.

மெட்ரோ ரயில் சேவை :

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்கான சேவையை 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கியது. மெட்ரோ இரயில் சேவை தொடங்கி 7 ஆண்டு பூர்த்தி அடைந்து பயணிகளுக்கான பயண சேவையை தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ இரயில் முதல் கட்டம் மற்றும் அதன் விரிவாக்கம் திட்டம் நிறைவேற்றி 54.41 கி.மீ தூரத்திற்கு அதன் இயக்கம் தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு மெட்ரோ இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தன் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை இம்மாதம் 11-ம் தேதி அன்று மட்டும் 2 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணத்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios