Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் தொடர் மழை எதிரொலி.. சென்ட்ரல் ரயில் நிலையம்.. 11 ரயில்கள் ரத்து - முழு பட்டியல் இதோ!

Chennai Rain Trains Cancelled : சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய மற்றும் அங்கிருந்து புறப்படவேண்டிய 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Chennai Heavy Rain 11 Trains in MGR Central Railway station cancelled ans
Author
First Published Dec 4, 2023, 12:44 PM IST

சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள பெத்திகுப்பம் என்ற இடத்தின் அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசலில் நூற்றுக்கணக்கான கார்கள் மற்றும் லாரிகள் சிக்கியுள்ளன. 100 அடி சாலை VR மால் பாலம் முதல் வெல்ஸ் இந்தியா பாலம் 18வது பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அது மூடப்பட்டுள்ளது. 

மேலும் ஆம்புலன்ஸ் அனைத்தும் தடையின்றி செல்ல சிறப்பு வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெளியூர்களுக்கு வரவேண்டிய மற்றும் அங்கிருந்து வெளியூர்களுக்கு புறப்படவேண்டிய 11 ரயில்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மிரட்டும் மிக்ஜாம் புயல்.. வெள்ளக்காடாக மாறும் சென்னை - அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படவேண்டிய ரயில்கள் ரத்து. 

வண்டி எண் : 20643 - சென்னை சென்ட்ரல் முதல் கோயம்புத்தூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வண்டி எண் : 12679 - சென்னை சென்ட்ரல் முதல் கோவை செல்லும் கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வண்டி எண் : 16203 - சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டள்ளது. 
 
வண்டி எண் : 12027 - சென்னை சென்ட்ரல் முதல் பெங்களூரு செல்லும் கேஎஸ்ஆர் பெங்களூரு சதாப்தி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வண்டி எண் : 12609 - சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு செல்லும் மைசூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வண்டி எண் : 16053 - சென்னை சென்ட்ரல் முதல் திருப்பதி செல்லும் திருப்பதி வண்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலுக்கு வரவேண்டிய ரயில்கள் ரத்து.

வண்டி எண் : 12676 கோயம்புத்தூர் முதல் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வரவேண்டிய வண்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வண்டி எண் : 12244 கோயம்புத்தூர் முதல் சென்னை சென்ட்ரல் வரவேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வண்டி எண் : 12008 மைசூரு முதல் சென்னை சென்ட்ரல் வரவேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வண்டி எண் - 22626 கேஎஸ்ஆர் பெங்களூரு முதல் சென்னை சென்ட்ரல் வரவேண்டிய ஏசி டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வண்டி எண் - 16054 திருப்பதி முதல் சென்னை சென்ட்ரல் வரவேண்டிய வண்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios