கருவை கலைத்துவிடு... மிரட்டும் கணவர்... கமிஷனர் அலுவலகத்தில் கதறி அழுத பெண்!

காதல் கணவரை சேர்த்து வைக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கதறி அழுத மைசூரு பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

chennai commissioner office women complaint

காதல் கணவரை சேர்த்து வைக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கதறி அழுத மைசூரு பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் ராதிகா (வயது25). இவர் நேற்று கதறி அழுதபடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சக்கர நாற்காலியில் வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அவருடன் மைசூரு போலீசாரும் வந்திருந்தனர். 

அவர் கொடுத்த புகார் மனுவில்;- சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் மைசூருவில் உள்ள ஒரு ஒட்டலில்  மேலாளராக வேலை பார்த்தார். அவரை நான் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டேன். இருவரும் தனியாக வீடு எடுத்து கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். chennai commissioner office women complaint

அதன் பலனாக நான் தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன். தனது குடும்பத்தினரை பார்க்க சென்னை வந்த என் கணவர், மீண்டும் மைசூரு திரும்பி வரவில்லை. அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை. இதனால் அவர் மீது மைசூரு போலீசில் புகார் கொடுத்தேன். போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். எனது கணவரை கண்டுபிடிப்பதற்காக மைசூரு போலீசாருடன் நான் சென்னை வந்துள்ளேன். விபத்தில் சிக்கியதால் எனக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் நடக்கக்கூட முடியவில்லை. தண்டையார்பேட்டையில் எனது கணவரை கண்டுபிடித்தோம். ஆனால் அவர் என்னுடன் சேர்ந்து வர மறுக்கிறார். உனது வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிடு, உன்னோடு வாழமாட்டேன் என்று சொல்கிறார். அவரது உறவினர்களும் என்னை மிரட்டுகிறார்கள். எனது கணவரை என்னுடன் சேர்ந்து வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios