வெள்ளநீரில் முதலையா ..! புகைபடம், வீடியோ வைரல்..!

செங்கல்பட்டு மாவட்டம்  கூடுவாஞ்சேரி பகுதியில் தேங்கிய மழை நீரில் , முதலை வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும் முதலை உள்ளது போல், வீடியோ மற்றும் புகைப்படங்கள்  பலரால் பகிரப்பட்டு வருகிறது. தற்போது , இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்  விளக்கம் அளித்துள்ளார்.

Chengalpattu Collector Statement

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பதிவாகி உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை விட்டுவிட்டு தொடர்ச்சியாகப் பல இடங்களில் மழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ள நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக இன்று காலை முதலே செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் மழை நீர் சூழந்து காணப்படுகிறது. நீர் நிலைகள் நிரம்பி காணப்படுகின்றன.

Chengalpattu Collector Statement

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம்  கூடுவாஞ்சேரி பகுதியில் தேங்கிய மழை நீரில் , முதலை வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. மேலும் முதலை உள்ளது போல், வீடியோ மற்றும் புகைப்படங்கள்  பலரால் பகிரப்பட்டு வருகிறது. தற்போது , இதுக்குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்  விளக்கம் அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஜி.எஸ்.டி எனப்படும் வல்லாஞ்சேரி கூட்ரோட்டில் முதலை வந்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அது மரக்கட்டை. ஜி.எஸ்.டி சாலையில் தண்ணீர் போகும் கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை மிதந்ததை முதலை என வதந்தி பரப்பி வருகின்றனர். முதலை வந்ததாக பரவும் செய்தி முற்றிலும் போலியானது. மக்கள் யாரும் இதனை நம்பவேண்டாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Chengalpattu Collector Statement

மேலும் பொதுவாக வெள்ள நீரில் முதலைகள் வராது என சொல்லப்படுகிறது. மேலும் முதலைகள் வாழ்ந்து வரும் பகுதிகளான முதலை பண்ணை மற்றும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வெள்ள நீரில் மூழ்கினால் மட்டுமே தண்ணீரில் முதலைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்று சொல்கிறார். மேலும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் முதலைகள் இனப்பெருக்கம் செய்வது வழக்கம். முட்டைகளும் அந்த நேரத்தில் தான் முதலைகள் இடும் என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த படம் தவறானது என சொல்லப்படுகிறது. 

வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து  வருகிறது. பல மாவட்டங்களில் விடிய விடிய கொட்டும் மழையினால், நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. கரையோர மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களின் குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர் மழை மற்றும் அணைகள் நிரப்பி, திறக்கப்படும் உபரி நீரால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள், வாழைகள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios