நெல்லை மாவட்டம் வண்ணார பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், ஒரு நபர் போன் பேசியவாறே பெட்ரோல் போட்டு  உள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக வண்டியில் தீப்பிடித்து எரிந்தது. மேலும் போன் பேசிய அந்த நபரையும் தீப்பற்றியது.வண்டியில் வந்த அந்த நபர் அலறி அடித்துக்கொண்டு அப்படியே ஒடி போக, பங்கில் இருந்த சக ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

"

இதுவரை காதுபட கேட்டு வந்த இது போன்ற விபரீத சம்பவங்கள் தற்போது நம் கண் முன்னே நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு பெட்ரோல் போடும் போது யாரும் செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இது போன்ற வீடியோவை பார்த்தும் நமக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றால், இதை விட வேறு எந்த விதத்திலும் சொல்லி புரிய வைக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை.