Asianet News TamilAsianet News Tamil

தீபாவளிக்குள் சி.சி.டி.வி. பொருத்தாவிட்டால் தியேட்டருக்கு படங்கள் தரப்படமாட்டாது...!

தியேட்டர்கள் மூலம் திருட்டுத்தனமான படங்கள் பிரிண்ட் எடுக்கும் முயற்சியைத் தடுக்க ஏற்கனவே மேற்கொண்ட அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், வரும் 6ம் தேதிக்குள் ஒவ்வொரு தியேட்டரும் சி.சி.டி.வியைப் பொருத்தியே ஆகவேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

CCTV in Diwali If you do not, the Movie will not be given to the theater
Author
Chennai, First Published Oct 24, 2018, 1:05 PM IST

தியேட்டர்கள் மூலம் திருட்டுத்தனமான படங்கள் பிரிண்ட் எடுக்கும் முயற்சியைத் தடுக்க ஏற்கனவே மேற்கொண்ட அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், வரும் 6ம் தேதிக்குள் ஒவ்வொரு தியேட்டரும் சி.சி.டி.வியைப் பொருத்தியே ஆகவேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இதைத் தடுக்கும் பொருட்டு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட  கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலை சென்னை நடைபெற்றது. CCTV in Diwali If you do not, the Movie will not be given to the theater

இந்தக் கூட்டத்தில் முக்கியமாக திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்க வேண்டும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் சில தீர்மானங்களை இரு தரப்பினரும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றியுள்ளனர்.

அவைகள் :

1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உள் / வெளி அரங்குகள், வாசல்கள், பார்க்கிங் பகுதிகளில் CCTV கேமரா பொருத்தப்பட வேண்டும். அதுவும் வருகிற நவம்பர் 6 தீபாவளி தினத்திற்குள் அமைக்க வேண்டும்.

2. அப்படி பொருத்தப்பட்ட கேமராக்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி record செய்யபடும்.

3. வருகிற நவம்பர் 15-ம் தேதிக்குள் CCTV கேமராவை பொருத்தாத திரையரங்குகளுக்கு புதிய திரைப்படங்கள் தரப்பட மாட்டாது.

4. இனி அனைத்து காட்சிகளிலும் 2 நபர்கள் திரையரங்குக்குள் முழு நேர கண்காணிப்பு பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

5. ஒவ்வொரு முறையும் திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.

6. திரைப்படத்தினை காண வரும் பொதுமக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாக பரிசோதனை செய்யப்படும்.

7. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கப்படும். மேற்படி விஷயம் குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை அந்த குழுவில் வைத்து ஆலோசித்து அதற்கு தீர்வு காண வேண்டும். மேலும் திருட்டு வீடியோவை ஒழிக்க இந்தக் குழு கடுமையாக போராடும்.

Follow Us:
Download App:
  • android
  • ios