சூரிய மின்சக்தி திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றசாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நத்தம் விஸ்வநாதன் தமிழக மின் துறை அமைச்சராக இருந்தவர்  நத்தம் விஸ்வநாதன். அப்போது சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக சூரிய மின்தகடுகளை பதித்து, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம் என்றும் இதற்கான அனுமதி வழங்ககப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் சூரிய மின்சக்தி திட்டத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பபித்திருந்ததாகவும், அனுமதி பெற முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தாகவும் நீதிமன்றத்தில்  மனுத்தாக்ல் செய்திருந்தார்.

இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன் விசாரித்த  நீதிபதி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

திருச்சி கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.