car driver harassment to his ex girl friend with his friend

திருமணமான தனது முன்னாள் காதலியை காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை தருவதாக அழைத்துச்சென்று தனது நண்பருடன் சேர்ந்து மாறி மாறி கற்பழித்துள்ளனர்.

குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்த குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் அங்கு சாலையோரமாக மின் விளக்குகள் எதுவும் எரியாமல் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

சந்தேகமடைந்த போலீசார் காரின் அருகே சென்று பார்த்தனர். காருக்குள் 2 வாலிபர்கள் சிரித்துக்கொண்டும் இளம்பெண் ஒருவர், ஆடைகள் கிழிந்த நிலையில் கதறி அழுதபடி இருந்தார். போலீசாரை கண்டதும் காரில் இருந்த வாலிபர்கள் இருவரும் தப்பி ஓட முயன்றனர். அப்போது அவர்களை மடக்கி பிடித்த போலீசார், இளம்பெண் உள்பட 3 பேரையும் காருடன் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில், தனது காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த காதலன், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் காதலிக்கும் போது எடுத்த புகைப்படங்களை தருவதாக ஏமாற்றி அழைத்து வந்து காரில் வைத்து நண்பருடன் சேர்ந்து கற்பழித்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

அம்பத்தூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார் கால் டாக்சி டிரைவர். இவர் திருவள்ளூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டது.

ஆனாலும் தன்னுடன் செல்போனில் பேசும்படியும், நேரில் வந்து தன்னை பார்க்க வரும்படியும் அசோக்குமார் அடிக்கடி அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்திருக்கிறார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோக்குமார் தனது முன்னாள் காதலிக்கு, “நாம் இருவரும் காதலிக்கும்போது சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை என் நண்பர் வைத்திருக்கிறார். நீயும் நேரில் வந்தால்தான் அந்த போட்டோக்களை எல்லாம் தருவதாக கூறுகிறார். எனவே நீ நேரில் வா” என கூறியிருக்கிறார். தனது முன்னாள் காதலன் சொன்னதை நம்பிய அந்த பெண் நேற்று முன் தினம் இரவு அம்பத்தூர் வந்துள்ளார். அப்போது தனது நண்பரான அன்பரசு என்பவருடன் காரில் அங்கு வந்த அசோக்குமார், தனது முன்னாள் காதலியையும் காரில் ஏற்றிக்கொண்டு வண்டலூர்-மீஞ்சூர் பைபாஸில் சாலையில் காரை நிறுத்தி சில்மிஷ வேலையை ஆரம்பித்துள்ளார்.

நீ என்னை காதலித்து ஏமாற்றி விட்டு இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் உன்னை பழிவாங்க அழைத்து வந்தேன் என்று கூறி காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு காருக்குள் வைத்தே தனது முன்னாள் காதலியை பலாத்காரம் செய்துள்ளார்.

தான் காதலித்த ஒருவன் இப்படிபட்டவனா என கலங்கிய அந்தப்பெண் அதிர்ச்சி தன்னை விட்டு விடும்படி கதறி இருக்கிறார். ஆனால், இரவு நேரம் என்பதாலும், காரின் கண்ணாடிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததாலும் அந்த பெண்ணின் அலறி கத்திய சத்தம் வெளியே யாருக்குமே கேட்கவில்லை. திருமணமானவர் என்றும் பாராமல் முன்னாள் காதலியை கதற கதற கற்பழித்து உள்ளார்.

அவர் முடித்ததும் தனது நண்பருக்கும் அந்த பெண்ணை விருந்தாக்கினார். அவரது நண்பரும் அந்த பெண்ணை காருக்குள்ளேயே வைத்து கற்பழித்துள்ளார். இருவரும் மாறி, மாறி இளம்பெண்ணை கற்பழிக்கும் போது ஒருவர் மாற்றி ஒருவர் அந்த காட்சிகளை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளனர். என்னை ஏமாற்றி அழைத்துவந்து இப்படி கற்பழித்து விட்டீர்களே? என்று கூறி அந்த இளம்பெண் கதறி அழுதுள்ளார். ஆனால் அவர்கள் இங்கு நடந்ததை வெளியே யாரிடமாவது சொன்னால், இந்த வீடியோவை நெட்டில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.

இதையடுத்து இளம்பெண்ணை கற்பழித்ததாக அசோக்குமார் மற்றும் அவருடைய நண்பர் அன்பரசு இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கை பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றி வழக்குப்பதிவு செய்து கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.