கோவையில் சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை சுந்தராபுரத்தில் நடந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை-பொள்ளாச்சி செல்லும் மிகவும் பிரதான சாலையாக உள்ளது. சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் பேருந்துக்காக பொதுமக்கள் நின்றிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கண்யிமைக்கும் நேரத்தில் ஒரு கார் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மீதும் ஆட்டோ மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கார் 150 கிலோமீட்டர் வேகத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆடி கார் பாண்டிச்சேரி பதிவெண் கொண்டது. 

இந்த காரை ஒட்டி வந்த மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை எப்படுதியதால் அந்த நபர் மீது பொதுமக்கள் பலர் தாக்குதல் நடத்தினர். பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை போலீசாரிடம் இருந்து மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பகுதியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.