300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்... மரத்தில் தலைகீழாக சிக்கி சின்னாபின்னமான இளைஞர்...!

கொடைக்கானல் அருகே 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

car accident...one people killed

கொடைக்கானல் அருகே 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் புத்தாண்டைக் கொண்டாட இன்னோவா காரில் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டனர். இன்று காலை சவரிக்காடு பகுதியில் கார் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரத்தில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. car accident...one people killed

காரில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் மரத்தில் தலைகீழாக தொங்கியபடியே உயிரிழந்தார். 6 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வந்தனர். இவ்வழியாக சென்றவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். car accident...one people killed

மேலும் இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சவரக்காடு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios