திருவள்ளூர்

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று ஆந்திர அரசு தமிழகத்திடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கு ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள், "பருவமழை பெய்தால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், பருவ மழை பொய்த்ததால் அது சாத்தியமில்லை. 68 டி.எம்.சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் வெறும் 4.50 டி.எம்.சி தண்ணீர்தான் இருக்கிறது. எனவே, இப்போது பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க முடியாது" என்று போனில் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளனர். 

பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கன அடி வரை தண்ணீரை சேமிக்கலாம். ஆனால், தற்போது வெறும் 48 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டும் உள்ளது. இதனால் பூண்டி ஏரியே குட்டைப் போன்று காட்சியளிக்கிறது.