Buses do not run since May 15 union strike announcement

13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மே 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யபோவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

13 வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் பணியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இந்நிலையில், 13 வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாத்தை சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மே 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யபோவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அனைத்து தொழிலாளர் சங்கத்தினரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மே 9 ஆம் தேதி வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெற உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.