bus burned down in road
விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் அருகே வந்த போது என்ஜினில் திடீரென தீபிடித்தது. இதனால் பஸ்சில் இருந்து பயணிகள் அலறி அடித்தபடி, பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி அரசுப் பேருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து மேல்மருவத்தூர் அருகே வந்த போது பேருந்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் உடனயாக இறங்கி, தீயண்பபுத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்த அச்சிறுப்பாக்கம் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர்.
ஆனாலும் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.நல்ல வேளையாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை..
இந்தவிபத்து குறித்து மேல்மருவத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
