கணவரை பிரிந்து தாய்வீட்டில் வசித்து வந்த அக்காவை சொந்த தம்பியே துண்டு துண்டாக வெட்டி எரித்த கோர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உக்கடத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்பவரோடு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான  சங்கீதா. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேஷியராக பணியாற்றி  வந்தார். இவர்களது மகள் அத்தியா.

3ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட சண்டையால் சங்கீதா கணவரை பிரிந்து குழந்தையுடன் உப்பிலிபாளையம் அம்மன்  கோயில் தெருவில் வசித்து வரும் தனது தாய் தம்பி ஆகியோருடன் கடந்த 2 ஆண்டாக வசித்து வந்தார்.  கணவரை பிரிந்த  அக்கா, தாய் வீட்டுக்கு வந்தது சரவணக்குமாருக்கு பிடிக்காத தம்பி அடிக்கடி, ‘நீ உன் கணவர் வீட்டுக்கு போ, இங்கே  வராதே’ எனக்கூறுவார்.

இவர்களின் தகராறால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்லியிருக்கிறார். இதை சமாளிக்க முடியாத  அவரது தாய், இருகூரில் உள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டுக்கு சரவணக்குமாரை அனுப்பி வைத்தார். ‘அக்கா இருக்கும் வரை இங்கே  வரவேண்டாம்’ என தாய் கூறியிருந்தார். `அக்கா வந்ததால் பெரியம்மா வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை உருவாகி விட்டதே’ என  ஆத்திரத்தில் இருந்த சரவணகுமார்.

நேற்று முன்தினம் தனது தாய் கூலி வேலைக்கு சென்று விட்டார். அப்போது சரவணக்குமார் திடீரென வீட்டுக்கு  வந்தார். வீட்டில் இருந்த  சங்கீதாவை தலையை பிடித்து அரிவாளால் வெட்டி கொன்றார். இதன்பின் சடலத்தை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து பைக்கில் எடுத்துச் சென்று  பீளமேடு விமான நிலையம் பின்புறத்தில் உள்ள காட்டு பகுதியில் போட்டு தீ வைத்து எரித்துள்ளார். தப்பி சென்ற சரவணக்குமாரை சிங்காநல்லூர்  போலீசார் கைது செய்தனர்.

போலீசிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ஞாயிற்றுக்கிழமை தாயை சந்திக்க ஆர்வமாக சென்றேன். ஆனால் அக்கா... `என்னை மெண்டல், தண்ட சோறு’ என்று கேவலமாக பேசினார். என் அக்கா எங்கள் வீட்டில் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. இதனால், எங்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.
இந்நிலையில், என்னை மென்டல் என்றும், மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும் என்றும் வீட்டில் அம்மாவிடம் கூறினார்.

இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று என் அம்மா மங்கையர்கரசி வேலைக்கு சென்று விட்டதால் நான், அக்கா சங்கீதா, அவரது மகள் ஆதித்யா ஆகிய 3 பேர் மட்டும் வீட்டில் இருந்தோம். அப்போது, என்னை மென்டல், தண்ட சோறு நினைத்தாயா என சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டேன். அவரது தலையை கதவில் பலமாக அடித்தேன். இதில் கீழே சரிந்து விழுந்து அவர் இறந்தார். குழந்தை ஆதித்யா இதை பார்த்து கதறி அழுதாள்.

நீ சத்தம் போட்டால் உன்னையும் கொன்று விடுவேன் என குழந்தையை மிரட்டினேன். ஆதித்யா அமைதியாக உட்கார்ந்து கொண்டாள். அவள் கண் முன்பாகவே, அரிவாளால் சங்கீதாவின் கழுத்தை அறுத்து உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து பின்பு பைக்கில் சடலத்தை ஏற்றி கொண்டு, குழந்தையை பின்னால் ஏற்றி கொண்டு விமானநிலையத்திற்கு பின்புறம் உள்ள காட்டில் தீவைத்து எரித்து விட்டு வந்து விட்டேன்.

வீட்டுக்கு வந்தபோது, என் அம்மா வேலைக்கு சென்று திரும்பி வந்திருந்தார். அவரிடம் சென்ற குழந்தை, சங்கீதாவை கொன்றதை அழுதபடியே கூறிவிட்டாள். இதனால் தான் நான் மாட்டி கொண்டேன் என இவ்வாறு சரவணக்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.