Asianet News TamilAsianet News Tamil

தமிழகம் வந்த பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல்... சேலத்தில் இருந்து வந்த கடிதத்தால் பரபரப்பு!!

பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ள நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

bomb threat letter to the pm modi  from salem
Author
Tamilnadu, First Published May 26, 2022, 6:40 PM IST

பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ள நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு துறைகளின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொள்கிறார். இதற்காக  பிரதமர் மோடி ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். சென்னை விமான நிலையம் வந்த மோடி,  சாலை மார்க்கமாக சென்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முன்னதாக பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பாஜகவினர் சென்னையில் குவிந்துள்ளனர். பிரதமர் மோடியின் சென்னை வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

bomb threat letter to the pm modi  from salem

5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேரு விளையாட்டு அரங்கம், சென்னை விமான நிலையம், ஐஎன்எஸ் அடையார் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. நேரு உள்விளையாட்டு அரங்கம் அமைந்திருக்கும் பெரியமேடு பகுதி பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு சேலத்திலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

bomb threat letter to the pm modi  from salem

சேலம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து அந்த வெடிகுண்டு மிரட்டல் கடிதம் சென்றிருக்கிறது. இதுகுறித்து மத்திய புலனாய்வுத்துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் இருந்து வெடி குண்டு மிரட்டல்  அனுப்பியவர்களின் விவரங்களை வைத்து சேலம் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் தலைமை தபால் நிலையத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே சென்னை பழைய விமானம் உள்பட பிரதமர் மோடி பங்கேற்கும் இடங்கள் எஸ்பிஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற நிலையில், அவர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ள நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios