தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் புதுவையில் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதியிலும் கடந்த 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் உள்ளது,

இன்று காலை 11 மணி நிலவரப்படி

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக 16,434, திமுக 11,647, பா.ஜ.க.432, தேமுதிக 95 வாக்குகளும்,

தஞ்சையில் 70,517, திமுக 47,685, பா.ஜ.க.1,253, தேமுதிக 590 வாக்குகளும்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக 28,856, திமுக 20,946, பா.ஜ.க.1,640, தேமுதிக 1,136 வாக்குகளையும் பெற்றுள்ளது.

இதன் மூலம் அதிமுக முன்னிலையிலும், திமுக 2 வது இடத்திலும், தேமுதிகவை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க.3 தொகுதிகளிலும் 3வது இடத்தில் உள்ளது.