birth and death certificate cost increased

சேலத்தில் பிறப்பு இறப்பு சான்றிதளுகான கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாகி உள்ளனர்

தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இதற்கு முன்...

இதற்கு முன்பாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.10 என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது.ஆனால் தற்போது முறையே ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். 

எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா ?

சான்றிதழ் உள்ளதா என பதிவேட்டை ஆய்வு செய்ய ரூ.100,

குறிப்பிட்ட ஆண்டில் பிறப்பு, இறப்பு பதிவுகள் இல்லாத நிலையில் பதிவேடுகளை பரிசீலனை செய்ய ரூ.100, பிறப்பு,

இறப்பு பதிவிலிருந்து ஒரு சான்றிதழ் வழங்கிட செலுத்த வேண்டிய தொகை ரூ.200

கூடுதல் நகல் பெறுவதற்கு, ஒவ்வொரு நகலுக்கும் கட்டணம் ரூ.200 ரூபாய்,

பதிவுகள் இல்லை என தெரிவித்து அளிக்கப்படும் சான்றிதழுக்கு கட்டணம் ரூ.100 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை விட மிக எளிதாக சொல்ல வேண்டும் என்றால், மொத்த சான்றிதழையும் பெற வேண்டும் என்றால் மொத்தம் ஆயிரம் ரூபாய் ஆகிறது. இதனை எதிர்த்து பொதுமக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.