விருதுநகரில் எதிரெதிரே வந்த பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தூக்கிவீசப்பட்ட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பைக்குகள் இரண்டும் பயங்கர சத்தத்தோடு வெடித்து தீப்பிடித்து எரிந்து நாசமாயின.

virudhunagar க்கான பட முடிவு

மதுரை மாவட்டம், மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் வசந்த குமார் (24). இவர், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேவுள்ள தேவர்குளம் கிராமத்தில் நடைப்பெற்று வரும் பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ளார்.

இங்கு தேவர்குளத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் மோட்டார் பைக்கை வாங்கிக் கொண்டு சிவகாசிக்கு வந்துக் கொண்டிருந்தார். திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜ்குமார் (31) என்பவர் சிவகாசிக்கு ஒரு வேலையாக வந்துவிட்டு மீண்டும் தனது பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். 

two dead body க்கான பட முடிவு

ஐயநாடார் ஜானகியம்மாள் கல்லூரி அருகே இருவரும் வந்துக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பைக்குகளும் படுவேகமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பைக்குகள் இரண்டும் மோதிய வேகத்தில் பெட்ரோல் கசிந்து பயங்கர சத்தத்தோடு வெடித்தது. பின்னர், தீப்பிடித்து எரிந்து நாசமாயின.

இருவரும் இறந்ததையும், பைக்குகள் பற்றி எரிந்துக் கொண்டிருப்பதையும் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் அக்கம்பக்கத்தினர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புக் காவலாளர்களுடன் வந்தனர் மல்லி காவலாளர்கள். இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து க்கான பட முடிவு

பின்னர், இந்த விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சரிசெய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மோட்டார் பைக்குகள் மோதிக் கொண்டதில் இருவரு உயிரிழந்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.