சிவகாசியில் காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவலரின் இருசக்கர வாகனத்தை, போலீசார் முன்னிலைலேயே திருடிச் சென்ற திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருபவர் சசி. இவர் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தை காவல் நிலையத்தின் வெளியே நிறுத்திவிட்டு பணியில் ஈடுபட்டிருந்தார்.

சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியுற்றார். 

இதையடுத்து காவல்நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்தனர். 

அப்போது, வெளியில் காவலர்கள் நின்று பேசிகொண்டிருந்தபோதே ஒருவர், சசியின் இருசக்கர வாகனத்தை அலட்டி கொள்ளாமல் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. 

இதைதொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருடனை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.