bike and bus accident in erode

ஈரோடு அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மாசிலாபாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது நண்பர் சூர்யாவை அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அந்தியூர் அம்மாப்பேட்டை அருகே சென்ற போது எதிரே வந்த பேருந்து இருசக்கர வாகனத்தின்மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. 

இதில், இளைஞர்களான சூர்யாவும், அரவிந்தும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அம்மாப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஊமாரெட்டியூர் பிரிவில் ஏற்பட்ட விபத்தில் சூர்யா(20) அரவிந்த்(22) இருவரும் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் மேட்டூர் அருகேயுள்ள மாசிலாபாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.