நீலகிரி

நீலகிரியில் உணவுக்காக கரடிகள் வாழும் பகுதிக்கு வேட்டையாட சென்ற சிறுத்தைப் புலியை அங்கிருந்த கரடி அடித்து கொன்றுள்ளது. அதுமட்டுமின்றி தன்னுடைய நகத்தால், சிறுத்தைப் புலியின் வயிற்றை கிழித்து துவம்சம் செய்துள்ளது.

உடற்கூராய்வுக்கு பிறகு சிறுத்தைப் புலி கரடி தாக்கி இறந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. "கரடி இருக்கும் பகுதிக்கு வேட்டைக்கு வந்த சிறுத்தைப் புலியை, கரடி தலையிலேயே அடித்து கொன்றுள்ளது தெரிந்தது. அதுமட்டுமின்றி சிறுத்தைப் புலியின் வயிற்றை, கரடி தனது கூரிய நகத்தால் கிழித்துள்ளது. இதனால் சிறுத்தைப் புலியின் குடல் சரிந்து விழுந்துள்ளது" என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.