நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான பான்மசாலா உள்ளிட்ட புகைப்பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011ம் ஆண்டு முதல் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவைக்கு மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான பான்மசாலா உள்ளிட்ட புகைப்பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011ம் ஆண்டு முதல் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் படி எனவே, இத்தகைய போதைப்பொருட்களை உற்பத்தி செய்வதோ, சேமித்து வைப்பதோ, எடுத்து செல்வதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைப்பதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதையும் படிங்க;- கடவுளே இது மாதிரி ஒரு கொடுமை யாருக்கு நடக்கக்கூடாது.. கணவன் கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி பலியான மனைவி.!

குட்கா, பான்மசாலா ஒழிக்க தமிழக காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று மே 23-ம் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து தமிழகத்தில் குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 2024ம் ஆண்டு மே 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- வாட்டி வதைக்கும் வெயில்.. பள்ளி திறப்பு தள்ளிப்போகிறது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!
குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களின் குட்கா விற்கப்படுகிறதா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
