ban for lorries in port



கப்பல் வழியாக  கள்ளநோட்டுகளை கடத்துவதாக வந்த  சந்தேகத்தின்  அடிப்படையில்  தற்போது சென்னை  துறைமுகத்திற்கு  வரும்  அனைத்து லாரிகளுக்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம்  துறை முகத்திலிருந்து லாரிகள் மற்றும் கண்டேய்னர்கள் வெளியே செல்லவும் , வெளியிலிருந்து துறைமுகத்திற்குள்  செல்லும்  லாரிகளுக்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 8  மணி நேரமாக  நடந்த  சோதனையில்,  சுங்கத்துறையினர், வருவாய் அதிகாரி புலனாய்வு துறை அதிகாரிகள் என  மொத்தம்  5௦ அதிகாரிகளுக்கு மேல்  தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .

இதனால்துறைமுக பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது . மேலும்  தங்கம்  உள்ளிட்ட  விலையுர்ந்த  பொருட்களும் கடத்தப்படுவதாக  வந்த  தகவலையடுத்து  சந்தேகத்தின்  பேரில் சோதனை  நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது