கொரோனா விதிமுறைகள்.. உள்ளூர் மக்கள் மட்டும் அனுமதி… அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடக்கம்..!

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று கோலாகலமாக ஜல்லிக்கட்டு தொடங்கியது.

 

Avaniyapuram jalliakattu in pongal festival at madurai

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை ஒட்டி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இன்று காலையில் தொடங்கி ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக காலை 8 மணி முதல் மாலை  4மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.  ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள்,  300 காளையர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கொரோனா காரணமாக  150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Avaniyapuram jalliakattu in pongal festival at madurai

முதல் மாட்டினை அமைச்சர் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் கொடி அசைத்து அனுப்பிவைத்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் காளைகளை அடக்கி பரிசுகளை வெல்ல காளையர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், காளையர்களும் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஜல்லிக்கட்டு போட்டியை காண உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பொருட்களும் , அவசர ஊர்திகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள்.மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவார்கள்.

Avaniyapuram jalliakattu in pongal festival at madurai

கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலில் உள்ளன. ஆனாலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி ஒரு போட்டியில் 300 வீரர்கள், 700 காளைகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும், 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால் வழக்கத்தைவிட கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios