Legislative provisions are in place to conduct secret election. Was held in the assembly division
கடந்த மாதம் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஓ.பி.எஸ். அணியினர் வலியுறுத்தினர். இதனால்,
சட்டமன்றத்தில் அமளி நடந்தது.இதையடுத்து, எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டனர். அப்போது, மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்க தொடர்ந்தார். அதில் சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும். சட்டமன்றத்தில் நடந்த சம்பவம்,

அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இதேபோல் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசுக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன், “சட்டமன்ற விதிகளில் ரகசிய வாக்கெடப்பு நடத்த இடம் இல்லை. சட்டமன்றத்தில் டிவிஷன் வாக்கெடுப்பு நடந்தது. அந்த நேரத்தில், திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர்” என கூறினார்.
