திருச்சி

இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வீட்டை விட்டே துரத்திய 2-வது திருமணம் செய்து அட்டூழியம் செய்துள்ளார். கணவர் மீதும், கணவரின் தம்பி மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இந்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். மேலும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் ஹெலன்ரூபிக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, முகமது சித்திக், இவரின் தம்பி முகமது பாரூக், உறவினர்கள் அமீனா, அப்துல்சமத் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார் காவல் உதவி ஆய்வாளர் ஹெலன்ரூபி.