Arrested by eight people arrested 105 alcohol bottles confiscated ...

நாமக்கல்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாமக்கல்லில் திருவள்ளுவர் திருநாளன்று சாராய விற்க தடை போட்ட பிறகும் சாராயம் விற்ற எட்டு பேரை காவலாளர்கள் கைது செய்து அவர்களிடம் இருந்து 105 சாராய புட்டிகளை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் சாராயக் கடைகள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மீறி யாராவது சாராய விற்பனையில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்டறிய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செந்தில் மேற்பார்வையில் மதுவிலக்கு காவலாளர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலாளர்கள் நடத்திய இந்த சோதனையில் தடையை மீறி சாராயம் விற்ற செய்த தனபால் (45), கணேசன் (48), சுரேஷ் (35), ஜானகிராமன் (30), ரவி (39), பொன்னுசாமி (48), முத்து (48), ஆனந்த் (25) ஆகிய எட்டு பேரை காவலாளர்கள் செய்தனர்.

அவர்களிடம் இருந்து 105 சாராய புட்டிகள் மற்றும் சாராயம் கடத்தப் பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட எட்டு பேரிடமும் சாராயம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.