மானாமதுரை,

வைகை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 540 பேர் கைது செய்யப்பட்டனர்.

மானாமதுரை அருகே முத்தனேந்தல், வேதியரேந்தல் உள்பட 12 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள், வைகை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7–ஆம் தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக மதுரை – இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன், அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

மேலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கிராமமக்கள் 540 பேர் மீது மானாமதுரை காவலாளர்கள் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.