இரட்டை இலை லஞ்ச வழக்கில் நீதிமன்றக் காவலில் அடைகத்கப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகரருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இரட்டை இலை சின்னம் பெற இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் போலீஸ் காவல் நிறைவடைந்ததை அடுத்து அவரை மே 12 ஆம் தேதி வரை காவலில் அடைக்க டெல்லி மாவட்ட நீதிமன்றம் இன்று பிற்பகலில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கனரா வங்கியில் 19.22 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த அதிரடி உத்தரவை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. 

இரட்டை இலை லஞ்ச வழக்கில் வலுவான ஆதாரங்களை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வரும்நிலையில், மோசடி வழக்கில் பிணையில் வரமுடியாத பிடிவாரண்டும் சுகேஷூக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.