Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. வசமாக சிக்கிய தாமகா நிர்வாகி.. தூக்கி எறிந்த ஜி.கே.வாசன்..
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலு உள்டளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக சங்கிலி தொடர் போல கைது நடவடிக்கை நீண்டு கொண்டே போகிறது.
இதையும் படிங்க: பாஜகவை சேர்ந்த அஞ்சலை யார்? இவர் யாருடைய மனைவி தெரியுமா? இவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பா?
குறிப்பாக அதிமுக, திமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஹரிஹரன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: Armstrong murder : ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.. அதிமுகவில் இருந்து மலர்கொடி நீக்கம்- இபிஎஸ் அதிரடி
இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்தியில்: தமிழ் மாநில காங்கிரஸ் இயக்க மாநில மாணவரணி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட ஹரிஹரன் அவர்கள் இயக்க விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இன்று முதல் த.மா.கா.வின் அடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.