Public Exam: தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை பள்ளிகள் ஐனவரி 10 முதல் காலவரையின்றி மூட்பட்டன. மேலும் கொரோனா பரவல் தீவரமடைந்த நிலையில் 10 ஆம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை ஜனவரி 18 ஆம் தேதி முதல் மூடப்பட்டன.இதனிடையே கொரோனா பாதிப்பு நன்கு குறைய தொடங்கியதால், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

ஆனால் நர்சரி வகுப்புகளுக்கு மட்டும் அனுமதி அளிக்காமல் இருந்தது.இந்நிலையில் புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை புது உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் வரும் திங்கள்கிழமை முதல் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி, நர்சரி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 2021-2022 ம் கல்வி ஆண்டுக்கான எல்கேஜி மற்றும் யுகேஜி குழந்தைகள் பயிலும் பள்ளிகளை வருகிற 14.03.2022 (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். எனவே பாடங்களை விரைவாக முடிக்க வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: School Reopen: இனி ஜாலி தான்.. மழலையர் பள்ளி திறப்பு..முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை

இதனிடையே தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். அதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ல் தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணையை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

அதே போன்று 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. அதற்குப் பிறகு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஜூன் 13ஆம் தேதி அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்குகின்றன. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.