andhra govt building dam across kosasthalaiyar river
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே சீதலக்குப்பம் பகுதியில் தடுப்பணைகள் கட்டும் பணியை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இதனை தடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் சீதலக்குப்பம் பகுதியில், லங்கா கால்வாயில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது. ஒரு தடுப்பணைக்கு 7 லட்சம் வீதம் 4 தடுப்பணைகளுக்கு 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கிடைக்கக் கூடிய தண்ணீர் கணிசமாக குறையும் என்றும், 10 கிராமங்களில் உள்ள 2000 ஏக்கர் நிலம் தண்ணீரின்றி காய்ந்துபோகும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு எடுக்கும் முயற்சிகள் குறித்து தமிழக அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும், இது வரை அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்..
ஆந்திர அரசின் இந்த அத்துமீறலைக் கண்டித்து சீதலக்குப்பத்தில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகினற்னர்.
