சூப்பர் அறிவிப்பு.. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்- வேளாண் பட்ஜெட்
நுண்ணீர் பாசன திட்டத்திற்கு உற்பத்தி திறனை மேம்படுத்த 773.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்த தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிகப்பட்டுள்ளது
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது விவசாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், விவசாயிகளுக்காகவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன் படி
- எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடியை விரிவாக்கம் செய்திட 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்திம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்
- ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானியங்களில் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க 65.30 கோடி நிதி ஒதுக்கீடு
- 2023 -24ஆம் ஆண்டில் அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்த வகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் வழங்கப்படும்.
- இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-2025ஆம் ஆண்டில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த 1,775 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
- சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை அதிகரிக்க 12.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
- 3.64 கோடியில் வறண்ட நிலங்களில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்
- பகுதி சார் தோட்டக்கலை பயிர் சாகுபடி ஊக்குவிக்க 2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவு செடிகள் வழங்கப்படும்.
- நுண்ணீர் பாசன திட்டத்திற்கு உற்பத்தி திறனை மேம்படுத்த 773.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
- தானியங்கி நீர் பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் செயல் விளக்கத்துடன் அமைக்கவும் 27.50கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
- ஏற்றுமதிக்கு உகந்த மா இரங்களின் உற்பத்தியை அதிகரிக்க 27.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய 12. 73 கோடி நிதி ஒதுக்கீடு
- புதிய பலா ரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க 1.14 கோடி நிதி ஒதுக்கீடு