அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ரத்து…பாஜக அறிவிப்பு…

2015 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வாக்குகளை பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. ஆனால், 120 தொகுதிகளில் தோல்வியை தழுவியது.

இதையொட்டி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, நாடு முழுவதும் 95 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

அப்போது, தமிழகத்துக்கு வரும் அமித்ஷா, இங்கு பாஜகவை பலப்படுத்த வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்க இருந்தார்.

அதே நேரத்தில் தமிழக மாநில தலைவர் மாற்றப்படலாம் என பாஜகவினர் எதிர் பார்த்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த மார்ச் 25ம் தேதி மேற்கு வங்கத்தில், நக்சல் இயக்கம் உருவாகிய, நக்சல்பாரி கிராமத்திற்கு சென்ற அவர், 29ம் தேதி, காஷ்மீர் சென்றார். இதைதொடர்ந்து வரும் 10ம் தேதி தமிழகம் வருவதாக முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அமித்ஷா இந்த மாதம் தமிழகம் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை என பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் இருந்து பாஜக மாநில செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.