அதிமுக எம்எல்ஏக்கள் சுமார் 119 பேர் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் அவசர நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் சென்றுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மிக அரிதாகவே வாகனங்கள் செல்லக்கூடிய அந்த ரிசார்ட்டுக்குள் மதியம் சுமார் 1 மணியளவில் நோயாளிகளை ஏற்றி செல்லும் ஆம்புலன்ஸ் ஒன்று உள்ளே சென்றது.
அந்த ஆம்புலன்சை தொடர்ந்து 2 மருத்துவர்கள் ஒரு காரில் சென்றனர்.

மருத்துவர்களும் ஆம்புலன்சும் உள்ளே சென்றதால் எம்எல்ஏக்கள் யாருக்காவது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதா? எம்எல்ஏக்களை பாதுக்காக்க ஏராளமான குண்டர்கள் ரவுடிகள் உள்ளே இருக்கிறார்கள் அவர்களுக்கு எதாவது ஆகிவிட்டதா என்ற பரபரபான கேள்வி எழுந்துள்ளது.
மூன்றாவது நாளாக இன்றும் சசிகலா கூவத்தூருக்கு செல்லவிருந்த நிலையில் ஆம்புலன்ஸ் அங்கு சென்றுள்ளதால் என்ன நடக்கபோகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சில எம்எல்ஏக்கள் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதில் யாராவது ஒருவர் அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அடைத்துவைக்கப்ட்டுள்ள எம்எல்ஏக்களில் 25 பேருக்கு சர்க்கரை நோய் உள்ளதாக கூறப்படுகிறது.
