alert unknown pwrsond roaming in tamilnadu for kidnaping

உஷார்..! "வேவு பார்க்கும் புது கும்பல்"...! யார் இவர்கள் ? என்ன சொல்கிறார்கள்..எதற்கு வருகிறார்கள் தெரியுமா..?

தமிழ்நாட்டில் பல இடங்களில் பகல் கொள்ளை,குழந்தை கடத்தல்,நகை திருட்டு என நாள்தோறும் பல குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில்,பிப்ரவரி 5 ஆம் தேதி, அதாவது நேற்று முன்தினம்,பாண்டிச்சேரியில், கோரிமோடு ஜிப்மர் ஹாஸ்பிடல் அருகில் உள்ள செக் போஸ்ட் பகுதியில், லாரியில் இருந்து , காவியில் உடை அணிந்திருக்கும் சில நபர்கள் இறங்கி உள்ளனர்.

அவர்கள் யார் எப்படி அந்த லாரியில் வந்தார்கள்..? லாரி ஓட்டுனருக்கே தெரியாமல், அந்த லாரியில் இறங்கி உள்ளனராம்.

இவர்களிடம் விசாரணை நடத்தினால்,எதற்கும் வாய் திறக்காமல் அவர்கள் ஏதோ சாமியார்கள் போன்று நடிக்கிறார்களாம்.

அவர்கள் கொண்டு வந்த பையில், ஆட்டு உறுப்புக்கள் அதனுடைய குடல் என அனைத்தும் ஒரு பையில் பச்சையாக கொண்டு வந்துள்ளனர்.

இவர்கள் எந்த கேள்விக்கும் பதில் கொடுக்காமல் வீடுகள் தோறும் ஆங்காங்கு பிச்சை எடுக்கின்றனராம்.

வேறு எதற்கும் சரியான பதில் கொடுக்காத இந்த நபர்கள் பிச்சை கேட்க மட்டும் வாய் திறப்பது ஏன்?

எதற்காக இவர்கள் இங்கு வந்துள்ளனர் இது போன்ற பல கேள்விகள் எழுகின்றது.

மேலும்,குற்ற சம்பவங்களில் சிக்கியவர்களில் பலரும் வட இந்தியர்களாக பலரும் உள்ளனர் என்றும், சமீபத்தில் கூட,வட இந்திய குற்றவாளி தமிழகத்தில் பொலிசாரிடம் சிக்கிய போது, தமிழக பெண்கள் அதிக நகை அணிகின்றனர்.அதனால் திருடுவதற்கு மிக எளிதாக உள்ளது என போலீசாரிடமே நேரடி வாக்கு மூலம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பொதுமக்கள் யாரும்,தெரியாத இது போன்ற நபர்கள் நம் வீட்டிற்கு வந்தால், யாரையும் உள்ளே சேர்க்காமல், உடனடியாக அந்த இடத்தை விட்டு விரட்டுவது நல்லது என சம்பத்தை நேரில் பார்த்த நபர் ஆடியோ மூலம் செய்தி அனுப்பி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது